Tamil Moral Stories for kids - முட்டாள் சாமியார்:- ஒரு காட்டுல ஒரு சாமியார் தவம் பண்ணிக்கிட்டு இருந்தாரு, அவர் கடவுளை நேர்ல சந்திச்சு சில வரன்கள் வாங்கணும்னு தவம் செஞ்சாரு
அவர் நினைச்ச மாதிரியா கடவுள் அவரு கிட்ட வந்து உனக்கு என்ன வரம் வேணும்னு கேட்டாரு அதுக்கு அந்த சாமியார் எனக்கு வானத்துல பறக்கவும் ,தண்ணீல நடக்கவும் வரம் வேணும்னு கேட்டாரு
வரம் வாங்குன அந்த சாமியார் தன்னோட கிராமத்துக்கு போக நடக்க ஆரம்பிச்சாரு
அப்ப அங்க ஒரு ஆறு குறுக்க வந்துச்சு,அவருக்கு முன்னடி ஒரு விவசாயி ஆத்த கடக்க முடியாம நின்னு கிட்டு இருந்தாரு
அவருகிட்ட இந்த சாமியார் சொன்னாரு என்னால இந்த தண்ணில நடக்க முடியும் உன்னால முடியுமான்னு கேட்டாரு
சாமியாரோட திமிரான பேச்ச கேட்ட அந்த விவசாயி அங்க வந்த படகு காரன்கிட்ட அஞ்சு ரூபா கொடுத்து என்ன அந்த பக்கம் கொண்டுபோய் விடுன்னு சொன்னாரு
படகுல ஏறுன விவசாயி இந்த சின்ன விசயத்துக்கு நீங்க முட்டா தனமா தவம் இருந்தீர்களானு கேட்டாரு
அப்பத்தான் அந்த சாமியாருக்கு புரிஞ்சாச்சு உலகத்தோட நன்மைக்கு எவ்வளவோ கடவுள்கிட்ட கேட்டிருக்க முடியும் இருந்தாலும் தன்னோட இந்த முட்டாள் தனமான வேண்டுதலை நினச்சு வறுத்த பட்டாரு அந்த சாமியார்
Comments
Post a Comment