வீம்புபிடித்த அரசன் -Arrogant King Kids Moral Story in Tamil :- ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு , அவருக்கு எப்பவும் தான் தான் ரொம்ப பெரியவன்ற வீம்பு இருந்துச்சு
அதனால யாரு அவர விட பேரும் புகளோடவும் இருந்தா அவருக்கு பிடிக்காது,அவுங்களோட புகழ குலைக்குறதுக்கு என்ன செய்ய முடியுமோ அத செஞ்சுக்கிட்டே இருப்பாரு
ஒருநாள் அந்த நாட்டுக்கு ஒரு சாமியார் வந்தாரு அவருக்கு சில மந்திர விதைகளும் தெரியும்
அதனால அவர் என்ன சொன்னாலும் நடக்கும்னு நாட்டு மக்கள் எல்லாரும் அவரு பின்னாடி போய் நின்னாங்க
அவரோட புகழ தெரிஞ்சுக்கிட்ட அரசருக்கு கோபம் வந்துச்சு
எப்படியாவது அவரோட புகழ குலைக்கணும்னு நினைச்சாரு ,அவர அரசவைக்கு அழைச்சிட்டு வந்து அவரோட புகழ குலைக்க நினைச்சாரு
அரசவைக்கு வந்த அந்த சாமியார் கிட்ட நீங்க நான் என்ன கைல வச்சிருக்கேன்னு சொல்லிடுவீங்களானு கேட்டாரு
அதுக்கு அந்த சாமியார் சொன்னாரு உங்க கைல ஒரு சாவி இருக்குன்னு சொன்னாரு
மிக சரியா அவரு சொன்னதும் கொஞ்சம் தயங்குந அரசர்
ஒரு புறாவ துணிய பொத்தி கைல வச்சிக்கிட்டு இப்ப என் கைல என்ன இருக்குன்னு கேட்டாரு அதுக்கு அந்த சாமியார் உங்க கைல ஒரு புறா இருக்குன்னு சொன்னாரு
உடனே அந்த புறா உயிரோட இருக்கான்னு கேட்டாரு அதுக்கு அந்த சாமியார் யோசிச்சாறு
உயிரோட இருக்குன்னு சொன்னா அந்த புறாவ கைல நசுக்கு கொன்னுடுவாருன்னு அவருக்கு தோணுச்சு
சாமியார் சொன்னாரு அந்த புறாவோடை உயிர் உங்க கைல இருக்கு , நீங்க மனசு வச்சா அந்த புறா வாழும் இல்லைனா அது செத்துடும்னு சொன்னாரு
சாமியாரோட நல்ல பதில கேட்ட அரசர் மனசு மாறி அவர புகழ்ந்து தன்னோட மந்திரியா வச்சுக்கிட்டாரு
Comments
Post a Comment