Lazy Donkey and Merchand Kids Moral Story in Tamil - சோம்பேரி கழுதை

Lazy Donkey and Merchand Kids Moral Story in Tamil - சோம்பேரி கழுதை 




ஒரு ஊருல ஒரு வியாபாரி வாழ்ந்துகிட்டு வந்தாரு

அவரு தினமும் பக்கத்துகிராமத்துக்கு போயி வியாபாரம் பன்னி சம்பாதிச்சாரு

அவரு பொருட்களை கொண்டு போக ஒரு கழுதைய வச்சிருந்தாரு

அந்த கழுத மேல பொருட்களை தினமும் ஏத்திக்கிட்டு அந்த கிராமத்தோட ஒரு பகுதியில் இருக்கிற ஆத்தக் கடந்து ஆத்துக்கு அந்த கிராமத்துக்கு போவாரு

அந்த வியாபார முன்னாடி நடக்க அவரு பின்னாடியே அந்த கழுத போகும்

நிறை மூட்டைகள் அந்த கழுத மேல ஏத்துரதுனால ரொம்ப மெதுவாத்தான் அந்த கழுத நடக்கும்

அந்த கழுத நல்லா உழைக்குரதால விதவதமான பொருட்களை வியாபாரம் செஞ்சு சம்பாதிச்சாரு அந்த வியாபாரி

என்னதான் நல்லா உழைச்சாலும் அந்த வியாபாரா தன்ன நல்லா கவனிக்கிறது இல்லைனு அந்த கழுத ரொம்ப வருத்தப்பட்டுச்சு

அடடா நல்லா உழைக்கிற என்ன இந்த வியாபாரி என்ன நல்லா கவனிக்கிறது இல்லயே நான் ஏன் இந்த வியாபாரிக்கு உழைக்கனும்னு நினைச்சுச்சு அந்த கழுத

ஒரு நாள் அந்த வியாபாரி உப்பு மூட்டைகளை அந்த கழுத மேல ஏத்திட்டு பக்கத்து கிராமத்துக்கு

போக நடக்க ஆரம்பிச்சாரு

உப்பு மூட்ட அதிக பாரமா இருந்ததால நடக்குரதுக்கு சிறமப்பட்ட அந்த கழுதையும் அவரு பின்னாடி யே அந்த ஆத்துல இறங்கி நடக்க ஆரம்பிச்சுச்சு

ரொம்ப பாரமா இருந்ததால மெது உக்காந்துச்சு அந்த கழுத அப்ப அந்த உப்பு மூட்ட நனைஞ்சு கறைய ஆரம்பிச்சு

உடனே மூட்டையோட எடை குறைய ஆரம்பிச்சது அடடா இது என்ன திடீர்னு பாரம் குறைய ஆரம்பிச்சுடுச்சேனு யோசிச்சுச்சு அந்த கழுத

கழுத தண்ணில மூட்டையோட உக்காரத பாத்த அந்த வியாபாரி வேகமா வந்து அந்த கழுத

எந்திரிக்கிரதுக்கு உதவுனானு

அடடா மூட்ட இப்படி நனைஞ்சு உப்பு விணாப்போச்சேனு நினைச்ச அந்த வியாபாரி ஒரு மூட்டைய தான் தூக்கிகிட்டு அந்த ஆத்த கடக்க ஆரம்பிச்சாரு

ஒஹோ மூட்டை நனைஞ்சா எடை குறையுமா இந்த விசயம் நமக்கு தெரியாம இத்தன நாளா அதிகா பாரத்த சுமந்து கஸ்டபட்டோமெ இனிமே இதே மாதிரி செஞ்சு சுலபமா மூட்டைய தூக்கல ராமனு நினைச்சது அந்த கழுத

மறு நாளும் இதே மாதிரி ஆத்துல உக்காந்து உப்ப கரைச்சுச்சு அந்த கழுத இதப்பாத்த அந்த வியாபாரி ஒரு மூட்டைய தான் தூக்கிட்டு கழுதயோட நடக்க ஆரம்பிச்சாரு

கடைசியா சுலபமா வாழ நல்ல ஒரு யோசன கிடைச்சதுன நினைச்ச அந்த கழுத தினமும் இது

மாதிரியே செஞ்சுச்சு இதப்பாந்த அந்த வியாபாரி இந்த கழுத வேனும்னே இப்படி பன்னுதோனு சந்தேகப்பட்டாரு

மறுநாள் உப்புக்கு பதிலா பஞ்சு மூட்டைய ஏத்துனாரு அந்த வியாபாரி

வழக்கம்போல ஆத்துல இறங்குன அந்த கழுத தண்ணில மூட்டைய நனைச்சுச்சு உள்ள இருந்த பஞ்சு நனைஞ்சு தண்ணிய உள்ளவாங்கிகிடுச்சு

பஞ்சு தண்ணில நனைஞ்சனால மூட்டையோட எடை அதிகமாச்சு இதப்பாத்த கழுதைக்கு என்ன பன்றதுனு தெரில

அடடா எப்பவும் தண்ணில நனைஞ்சா எடை குறையும்னு நினைச்சா இது என்ன எடை கூடிகிட்டது னு தனக்குள்ளயே கேட்டுகிட்ட கழுத சிறமப்பட்டு அந்த மூட்டைய தூக்கிகிட்டு நடந்துச்சு

பஞ்சு மூட்டை நனைஞ்சாலும் கறையாதுக்கிறதுனால அந்த வியாபாரியும் மூட்டைய தூக்க வரல இதப்பாந்த அந்த கழுத நமக்கு இது தேவதான் நல்ல படியா உழைச்சுகிட்டு இருந்த நாம

குறுக்குபுத்திய பயன்படுத்தி நம்ம கடமைய செய்யாததுனால நமக்கு இப்படி தண்ட கிடைச்சிடுச்சு

இனிமே நாம் நல்லபடியா உழைக்கனும்னு முடிவு பன்னி அதுபடியே வாழ ஆரம்பிச்சுச்சு

குழந்தைகளா நாம உழைக்கிறதுக்கு கஸ்டப்பட்டு சோம்பேரித்தனமா இருந்தம்னா அந்த கழுத மாதிரி அதிக கஸ்டம் தான் நமக்கு கிடைக்கும் அதனால உங்க வேலைகளை கஸ்டம்னு பாக்காம நீங்களே செஞ்சு முடிச்சீங்கன்னா உங்களுக்கு நல்லது

Comments