யானையும் நண்பன்
ஒரு காட்டுல ஒரு பெரிய யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அது நம்ம ரொம்ப நாளா தனியாவே இருக்கமே நமக்கு நண்பர்களே கிடைக்க மாற்றாங்கனு வருத்தப்பட்டுச்சு
உடனே நாம புது நண்பர்களத் தேடிப் போவோம்னு முடிவு பண்ணுச்சு காட்டு வழியா நடந்து போன அந்த யானை ஒரு மரத்து மேல இருக்குர குரங்க பாத்துச்சு குரங்கா
ரே குரங்காரே நாம ரெண்டு பேரு நண்பர்களா இருப்பமானு கேட்டுச்சு
அதக்கேட்ட அந்த குரங்கு அடடா பெரிய யானையே உன்னப்போல பெரிய உருவம் எனக்கு கிடையாது நான் ஒரு சின்ன விலங்கு எனக்கும் உனக்கும் நட்பு வராதுன சொல்லிட்டு மரத்துக்கு மரம் தாவி ஓடிப்போயிடுச்சு
இதக்கேட்ட யானைக்கு ரொம்ப அழுகையா வந்துச்சு
அதுக்கு அப்பரமா ஒரு எலிய பாத்துச்சு யானை
எலியாரே எலியாரே நாம நண்பர்களா இருப்பமானு கேட்டுச்சு அந்த யானை
அடடா பெரிய யானையே என்னோட விளையாட உன்னால முடியாது என்னப்போல சின்ன உருவம் கொண்டவங்கதா என்னோட நண்பனா இருக்க முடியும்ன சொல்லிட்டு தன்னோட வளைக்குள்ள ஓடிப்போயிடுச்சு
இதக்கேட்ட அந்த யானை மேலும் சோர்வடைஞ்சு போச்சு
தொடர்ந்து அந்த காட்டுகுள்ள நடந்த அந்த யானை
ஒரு தவளைய பாத்தச்சாம் அதுகிட்ட தவளையாரே தவளையாரே நாம ரெண்டுபேரும் நண்பர்களா இருப்பமானுகேட்டுச்சு
அடடா பெரிய யானையே என்னோட எப்படி நீ தாமரை இலையில் உக்கார முடியும் அதனால் உன்
உருவத்துக்கு ஏத்த நண்பன தேடிக்கோனு சொல்லிட்டு தாவி ஓடிடுச்சு
அதுக்கு அப்புரமா ஒரு குள்ளநரிய பாத்துச்சு யானை நரியாரே நரியரே நாம நண்பர்களா இருப்போமானு கேட்டுச்சு
அடடா பெரிய யானையே என்னைபோல் சிரிய உருவம் உடைய விலங்குதான் எனக்கு நண்பனா இருக்க முடியும் நீ வேற நண்பன தேடிக்கோனு சொல்லிட்டு ஓடிப்போயிடுச்சு
ஓடிப்போயிடுச்சு
இதக்கேட்ட அந்த யானை எனக்கு நல்ல நண்பனே கிடைக்கா மாட்டாங்கனு வருத்தப்பட்டு தன்னோட இருப்பிடத்துக்கு போயிடுச்சு
சில காலங்களுக்கு அப்புரமா அந்த காட்டே பரபரப்பா இருந்துச்சு
எல்லா மிருகமும் உயிருக்கு பயந்து ஓடுரத பாத்துச்சு அந்த யானை
மரத்துல இருந்த அந்த குரங்க பாத்து என்ன ஆச்சு குரங்காரே எதுக்கு எல்லாரும் இப்படி
ஓடுரீங்கனு கேட்டது
அதுக்க அந்த குரங்கு இந்த காட்டுக்கு புதுசா ஒரு புலி வந்து இருக்கு அந்த புலி எல்லா மிருகங்களையும் வேட்டையாடி கொண்ணுகிட்டு இருகுனு சொல்லுச்சு
அடடா சின்ன சின்ன உயிரனங்கள் வாழர இந்த காட்டுகுள்ள வந்து ஒரு புலி வேட்டையாடுரதானு
கோபப்பட்டு மெதுவா காட்டுக்குள்ள நடந்துபோச்சாம் அந்த யானை
அப்பத்தான் அந்த புலி வேட்டையாட வந்துகிட்டு இருந்துச்சு அதப்பாத்த அந்த யானை ஒரே எத்து எத்து எத்துச்சு அந்த புலிய
யானையோட கால்ல அடிபட்ட அந்த புலிய உயிருக்கு பயந்து அந்த காட்டவிட்டே ஓடிடுச்சு
இதப்பாந்த அந்த சின்ன விலங்குகள் எல்லாம் அடடா பலம் வாய்ந்த அந்த யானைய அது என்னோட நண்பன் என்னோட நண்பன்னு சொல்ல ஆரம்பிச்சுச்சு
புதுசா நண்பர்கள் கிடைச்ச அந்த யானைக்கு ரொம்ப சந்தோசமாகிடுச்சு பெருசா இருந்தா என்ன நல்ல மனசுடைய விலங்கு எந்த அளவுள இருந்தாலும் நண்பனா எடுத்துக்களாம்னு அந்த விலங்குகள் தன்னோட புது நண்பனான யானை கூட விளையாட
ஆரம்பிச்சுங்க
குழந்தைகளா இந்த கதையில் இருந்து நாம என்ன கத்துகிட்டம்னா ஒருத்தரோட குரைய வச்சு அவுங்களோட நட்ப உதாசினப்படுத்த கூடாது.
Comments
Post a Comment