Fox and the Sour Grapes Story in Tamil - நரி கதை

 Fox and the Sour Grapes Story in Tamil - நரி கதை





ஒரு ஊருல ஒரு குள்ள நரி இருந்துச்சாம்

அது ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்குர ஒரு குகைல வாழ்ந்துட்டு வந்துச்சு

ஒரு நாள் பக்கத்துல காட்டுல இருக்குர தன்னோட சகோதரன பாக்கனும்னு ஆசைப்பட்டுச்சு

உடனே அவசரமாப் பொரப்பட்ட அந்த குள்ளநரி காலை உணவு கூட சாப்பிடாம கிளம்புச்சு

அந்த காட்டுப்பகுதியில் தனியா நடந்துபோன அந்த குள்ளநரிக்கு திடீர்னு பசி எடுத்துச்சு

அடடா அவசரத்துல காலை உணவு சாப்பிடாம் கிளம்பிட்டமேனு தனக்குள்ள பேசிக்கிட்ட அந்த

குள்ளநரி அக்கம் பக்கத்துல ஏதாவது உணவு கிடைக்குமானு பாத்துகிட்டே நடந்துச்சு

அது காட்டுப்பகுதிங்கிரதுனால எவ்வளவு தேடியும் அந்த நரிக்கு உணவு கிடைக்கள

அந்த சோகத்துலயே நடந்து வந்த அந்த நரி ஒரு இடத்துல திராட்டை செடி இருக்கிறர பாத்துச்சு

அந்த திராட்சை செடியில் ஏதாவது திராட்சை பழம் இருக்கானு தேடுச்சு

அந்த திராட்சை செடியோட மேல் உயரத்துல ஒரு

கொத்து இருந்துச்சு

அட்டா நல்லா பழுத்திருக்குர திராட்சை கொத்து ரொம்ப உயரத்துல இருக்கேனு யோசிச்ச அந்த நரி

அந்த திராட்சை பழக் கொத்த பிடுங்க முயற்சி செஞ்சது

அந்த நரி குதிச்சு குதிச்சு அந்த திராட்சைய பிடுங்க பாத்துச்சு

எவ்வளவு முயற்சி செஞ்சும் அந்த பழங்கள பிடுங்க முடியல

அடடா அந்த இனிப்பான திராட்சை நமக்கு கிடைக்காதோனு கவலப்பட்ட நரி

ஓடவந்து குதிச்சு மேலும் முயற்சி செஞ்சுச்சு

அப்படியும் அதப் பிடுங்க முடியாமப் போகவே

சீ சீ இந்த பழம் புளிக்கும்னு தனக்குள்ள சமாதானமடைஞ்ச அந்த நரி தன்னோட தோல்விய மறைச்சு மனச தேத்திக்கிட்டே நடந்து போயிடுச்சு

குழந்தைகளா தனக்கு ஒரு பொருள்கிடைக்கலைனதும் அது புளிக்கும்னு நினைச்ச அந்த நரி மாதிரி மனச மாத்திக்காம மேலும் மேலும் முயற்சி செஞ்சிங்கன்னா உங்களுக்கு வெற்றிகிடைக்கும்

Comments