Cunning Fox and the Clever Stork - தந்திர நரியும் புத்திசாலி கொக்கும்

 Cunning Fox and the Clever Stork - தந்திர நரியும் புத்திசாலி கொக்கும் 



ஒரு காட்டு பகுதியில ஒரு தந்திரகார நரி வசிச்சு வந்தது அந்த நரிக்கு தான் ஒரு புத்திசாலின்னு நினைப்பு அது எப்ப பாத்தாலும் யாரையாவது மட்டம் தட்டுவது தான் வேலையே.

அந்த நரிக்கு ஒரு கொக்கு நண்பன் இருந்துச்சு அந்த கொக்கு ஒரு புத்திசாலி , அந்த கொக்குக்கு தந்திரகார நரியா இருந்தாலும் அதோட நட்பு வச்சது புடிச்சிருந்தது.

ஒருநாள் அந்த கொக்க தன்னோட வீட்டுக்கு விருந்துக்கு அலைச்சது அந்த நரி .உடனே அந்த நரியோட  வீட்டுக்கு போச்சு அந்த புத்திசாலி கொக்கு.

விருந்தினரா வந்த அந்த கொக்குக்கு ஒரு பெரிய தட்டுல சூப் போட்டு கொடுத்து குடிக்க சொல்லுச்சு . நீண்ட  வாய் இருக்குற கொக்கால  அந்த சூப்ப குடிக்க முடியல .ஆனா அந்த நரி தட்டுல இருந்த சூப்ப சுலபமா நக்கால நக்கி நக்கி குடிச்சது .

நீண்ட வாய் இருக்குற கொக்குக்கு வேணும்னே பாத்திரத்துல கொடுக்காம தட்டுல சூப் கொடுத்த அந்த நரி , எப்படி அந்த கொக்கு சூப்ப குடிக்க போகுதுனு தந்திரமா பாத்தது அந்த நரி.

நரியோட தந்திரத்த தெரிஞ்சிகிட்ட அந்த கொக்கு எனக்கு வயிறு சரியில்ல நீங்களே குடிங்கனு சொல்லிட்டு கிளம்பிடுச்சு அந்த கொக்கு .அந்த கொக்க முட்டாளாக்கியச்சுனு ரொம்ப சந்தோச பட்டது அந்த நரி 

சிலகாலங்களுக்கு அப்புறமா என்ன முட்டாளா நினச்ச அந்த  நரிக்கு பாடம் கற்பிக்க வேண்டும்னு நினைச்ச அந்த கொக்கு தன்னோட வீட்டுக்கு விருந்துக்கு அழச்சுச்சு அந்த நரிய.

கொக்கோட வீட்டுக்கு வந்த நரிக்கு சின்ன வாய் உடைய பாத்திரத்துல சூப் எடுத்துட்டு வந்து கொடுத்துச்சு அந்த கொக்கு . எப்பயும் தட்டுல இருக்குற சூப்ப சுலபமா நக்கி குடிக்கிற நரியால பெரிய பாத்திரத்துல இருக்குற சூப்ப குடிக்க முடியல .

தன்னோட தவறுக்கு சரியான பாடம் கிடைச்சதுன்னு நரி க்கு உணர்ந்தது .தனுக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டு அந்த வீட்ட விட்டு வேகமா ஓடிடுச்சு அந்த நரி.

தந்திர நரிக்கு பாடம் புகட்டுன அந்த புத்திசாலி கொக்கோட கதைல இருந்து நாம இன்னைக்கு என்ன கத்துக்கிட்டம்னா ஒருத்தருக்கு நாம தீமை செய்தோம்னா நமக்கும் அந்த தீமைதான் பரிசா கிடைக்கும் 


இதைத்தான் திருவள்ளுவர் 


பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

அப்படினு சொல்லிருக்காரு 


Comments