The Boy and the Starfish

 Making a Difference – The Boy and the Starfish- kids bedtime story in tamil:- ஒரு கடற்கரைல ஒரு சிறுவன் நடந்து போய்கிட்டு இருந்தான்

The Boy and the Starfish



அந்த ஒரு பெரியவர் குனிஞ்சு என்னமோ எடுத்து கடல்ல தூக்கி போட்டுக்கிட்டு இருந்தாரு

மெதுவா அவர் கிட்ட வந்த அந்த சின்ன பையன்

நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்டான்

அதுக்கு அந்த பெரியவர் இங்க பாத்தியா இதுதான் ஸ்டார் மீன்

இது அலையோட வேகத்துல கடற்கரைக்கு வந்துடும் அதனால திரும்ப கடலுக்கு போக முடியாது அதான் நான் அதுகள தூக்கி கடல்ல போட்டு கிட்டு இருக்கேன்னு சொன்னார்

இங்க நிறைய ஸ்டார் மீன் இருக்கு இது மாதிரி நிறைய கடற்கரை இருக்கு

நீங்க செய்ற இந்த சின்ன விசயத்தால எப்படி இந்த ஸ்டார் மீனோட வாழ்க்கைல மாற்றம் வரப்போகுதுன்னு கேட்டான்

அதுக்கு அவர் ஒரு சின்ன மீன கைல எடுத்து கடல்ல தூக்கி போட்டாரு ஆனா இந்த சின்ன மீனோட வாழ்க்கைல நான் மாற்றம் கொண்டு வந்துட்டேன்ல அப்படினு சொன்னாரு

அப்பத்தான் அந்த சின்ன பையனுக்கு புரிஞ்சது நாம செய்ற செயலாள கடுகளவு நன்மை கிடைச்சாலும் அது நல்லதுதான்னு

Comments